» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து அணி: ஐசிசி தரவரிசையில் முதல் இடம்!!

திங்கள் 14, ஜூன் 2021 10:41:12 AM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டை வென்ற நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் 1-0 எனக் கைப்பற்றியுள்ளது. 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட், பிர்மிங்ஹமில் நடைபெற்றது.  காயம் காரணமாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் விலகினார்கள். இதனால் டாம் லதம் கேப்டனாகச் செயல்பட்டார். வில்லியம்சனுக்குப் பதிலாக வில் யங்கும் வாட்லிங்குக்குப் பதிலாக டாம் பிளெண்டல்லும் நியூசி. அணியில் தேர்வானார்கள். 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்க் வுட் 41 ரன்கள் எடுத்தார். லாரன்ஸ் 81 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணித் தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் ஹென்றி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 119.1 ஓவர்களில் 388 ரன்கள் எடுத்தது. கான்வே 80, வில் யங் 82, டெய்லர் 80 ரன்கள் எடுத்தார்கள். பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 41.1 ஓவர்களில் 122 ரன்களுக்குச் சுருண்டது. ஹென்றி, வாக்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 10.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டாம் லதம் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார். 

2-வது டெஸ்டை வென்றதால் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரையும் நியூசிலாந்து அணி 1-0 எனக் கைப்பற்றியுள்ளது. மேட் ஹென்றிக்கு ஆட்ட நாயகன் விருதும் கான்வே, பர்ன்ஸ் ஆகியோருக்கு தொடர் நாயகன்கள் விருதும் வழங்கப்பட்டன. இந்த வெற்றியினால் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி. இந்திய அணி 2-வது இடத்திலும் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory