» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜுனியர் உலக்கோப்பை ஹாக்கி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டி இளம் வீரர் தேர்வு

சனி 12, ஜூன் 2021 9:13:21 PM (IST)ஜுனியர் ஆண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வான கோவில்பட்டி இளம் வீரருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர்கள் சக்திவேல், சங்கரி தம்பதியின் மகன் மாரிஸ்வரன். ஹாக்கி வீரரான மாரிஸ்வரன் பள்ளி காலம் முதல் ஹாக்கியில் அசத்தி வருகிறார். கோவில்பட்டி அரசு கல்லூரியில் பயின்று வரும் மாரிஸ்வரன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவர் விடுதி அணிக்காக விளையாடி வந்தார். மத்திரயசின் ஹீலோ திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் மாரிஸ்வரன் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் கடந்த ஆண்டு டிசம்பர் 25ந்தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 18ந்தேதி வரை பெங்களுரில் நடைபெற்ற இந்திய ஜீனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். 

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் மாரிஸ்வரன் என்பது குறிப்பிடதக்கது. இதையெடுத்து ஹாக்கி வீரர் மாரிஸ்வரனுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் செய்தி துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மாரிஸ்வரனுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அந்த பயிற்சி முகாமிலும் மாரிஸ்வரன் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இந்த ஆண்டு இறுதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவுள்ள ஜுனியர் ஆண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான பயிற்சி முகாம் நாளை பெங்களுருவில் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாரிஸ்வரன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் ஜூனியர் ஹாக்கி அணிக்கு மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று ஹாக்கி பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் சென்னையில் கனிமொழி எம்.பி.யை மாரிஸ்வரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சாதனை புரிந்த மாரீஸ்வரன் சக்திவேலுக்கு, ஏ.எஸ்.பன்னீர் செல்வன் எழுதிய "கருணாநிதி : எ லைஃப்" என்ற புத்தகம் மற்றும் நிதியுதவி வழங்கிப் பாராட்டிய கனிமொழி எம்.பி., சிறப்பாக விளையாடி பிற்காலத்தில் அதிகளவிலான தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் சேகர் ஜே.மனோகரன், பொதுச் செயலாளர் எம்.ரேனுகாலட்சுமி, பொருளாளர் கே.ராஜராஜன், இணை செயலாளர்கள் எஸ்.திருமால்வளவன் மற்றும் டி.கிலெமண்ட் லூர்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ப. சுகுமார்Jun 13, 2021 - 07:46:28 AM | Posted IP 108.1*****

இளம் வீரர் மாரீஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory