» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னை அணிக்காக 200 போட்டிகள் : வயதானவனாக உணர்வதாக கேப்டன் தோனி உருக்கம்

சனி 17, ஏப்ரல் 2021 4:42:08 PM (IST)



சென்னை அணிக்காக 200 போட்டிகள் விளையாடியதால், வயதானவனாக உணர்கிறேன் என கேப்டன் தோனி கூறியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.  இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பீல்டிங்கிற்காக தோனி களமிறங்கியது 200வது போட்டியாகும்.  இதுவரை ஐ.பி.எல்.லில் 206 போட்டிகளை விளையாடியுள்ள தோனி, சென்னை அணிக்காக 176 ஐ.பி.எல். போட்டிகளிலும் மற்றும் 24 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

சென்னை அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியது பற்றி, போட்டி முடிந்ததும் பேட்டியளித்த தோனி, மிக வயதானவன் என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது.  இது ஒரு மிக நீண்ட பயணம்.  கடந்த 2008ம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியது.  தென்ஆப்பிரிக்கா, துபாய் மற்றும் திரும்ப இந்தியாவில் விளையாடினேன்.  200வது போட்டியை மும்பையில் விளையாடுவேன் என நினைக்கவில்லை என்று கூறினார்.

இந்த போட்டியில் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதுபற்றி கூறிய தோனி, சாஹர் தேர்ந்த பந்து வீச்சாளராகி விட்டார்.  பிராவோவும் தேவையான நேரத்தில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த கூடியவர் என்பதில் எந்த ரகசியமும் இல்லை என கூறினார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது.  அடுத்து விளையாடிய சென்னை அணி, 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அடுத்த போட்டியை சென்னை அணி வருகிற திங்கட்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products





Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory