» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் : தமிழக அணியில் இருந்து நடராஜன் விடுவிப்பு

வியாழன் 11, பிப்ரவரி 2021 10:54:20 AM (IST)

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணியில் இருந்து நடராஜன் விடுவிக்கப்படுவதாக தமிழக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து அலகாபாத் மற்றும் புனேவில் நடைபெறும் 5 டி-20 போட்டிகள் மற்றும்ம் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன.

தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய  தொடரில் மூன்று டி-20 போட்டிகள், ஒரு டெஸ்ட் மற்றும் 1 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நடராஜன் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது அவர் விரைவில் தொடங்கவுள்ள விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி தொடருக்கான தமிழக அணியில் இடம் பெற்று இருக்கிறார். 

இந்த நிலையில் இங்கிலாந்துடன் அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக நடராஜனை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அவரை அணியில் இருந்து விடுவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெறுவதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சிக்கு செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir ProductsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory