» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி : தூத்துக்குடி மாணவ, மாணவிகளுக்கு எஸ்பி பாராட்டு

வியாழன் 21, ஜனவரி 2021 10:51:26 AM (IST)மாநில அளவிலான ஜுனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்ற பெற்ற தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

2021 ஆம் ஆண்டிற்கான 26 வது மாநில அளவிலான மட்சுமா கியோகுசின் காய்கான் கராத்தே ஜுனியர் காராத்தே விளையாட்டு போட்டி கடந்த 10ம் தேதி சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேரந்த பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 7 வயது கராத்தே பிரிவில் தூத்துக்குடி எபன் மெட்ரிக் பள்ளி மாணவர்  மாதேஷ், 10 வயது பிரிவில் தூத்துக்குடி லியோ மெட்ரிக் பள்ளியைச் சேரந்த மாணவி சோபியா மற்றும் 16 வயது பிரிவில் பி.எம்.சி மெட்ரிக் பள்ளி மாணவன்  மரிய வளன் ஆகிய மூவரும் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர். 

மேலும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்த தூத்துக்குடி மாவட்டம் ஈசி பிட்னஸ் கராத்தே அகடமி, கராத்தே மாஸ்டர்  இம்மானுவேல்-க்கு மாநில அளவிலான சிறப்பு பரிசு பெற்றுள்ளார். மாநில அளவில் கராத்தே போட்டியில் பரிசு பெற்ற பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கராத்தே ஆசிரியர் ஆகியோரை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், கராத்தே மாஸ்டர்  ஜெயக்குமார், கராத்தே பயிற்சி பெற்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறை முதல் நிலைக் காவலர்  ராஜலிங்கம் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆயவாளர்  பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory