» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : பாண்டியா உள்ளே.. நடராஜன் வெளியே.!

புதன் 20, ஜனவரி 2021 11:27:34 AM (IST)

இங்கிலாந்து அணியுடன் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இங்கிலாந்துடன் மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், முதல் இரு போட்டிகளுக்கான அணி வீரர்களை மட்டும் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர். இங்கிலாந்து அணி பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் பயணித்து 4 டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், அடுத்த போட்டிகள் அகமதாபாத்திலும் நடக்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்த கேப்டன் கோலி அணிக்குத் திரும்பியுள்ளார். நீண்ட காலத்துக்குப் பின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிக்குத் திரும்பியுள்ளார். பந்து வீசுவதில் சிரமம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார்.

காயம் காரணமாக ஆஸி. தொடருக்குச் செல்லாமல் தவிர்த்த வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா இந்திய அணிக்குள் வந்துள்ளார். சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் அணியில் இடம் பெற்றுள்ளார். அதேசமயம், ஆஸ்திரேலியத் தொடரில் கடைசி டெஸ்ட்டில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜனுக்கு முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மாற்று வீரர்களாக பிரியங்கா பஞ்சல், கே.எஸ்.பரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷான்பாஸ் நதீம், ராகுல் சாஹர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர்,கே. கவுதம், சவுரப் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, விருதிமான் சாஹா, ரிஷ்ப் பந்த், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் (உடல் தகுதி அடிப்படையில்), ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory