» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தனிபிரிவு ஏட்டு பணியிட மாற்றம்... சமுக விரோதிகள் கொண்டாட்டம்... பொதுமக்கள் வருத்தம்!!

வியாழன் 11, ஜூன் 2020 12:43:40 PM (IST)

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த காவலர் பணி  இட‌மாற்றம் செய்யப்பட்டதால் பாெதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர்.

தூத்துக்குடியின் புறநகர் பகுதியான தாளமுத்துநகரில் பல ஆண்டுகளாகவே சில சமூக விரோதிகளால் சட்டவிரோதமாக மது, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துதல், கடல்அட்டை கடத்தல், கள்ளதொடர்பு வழக்குகள் போன்றவை நடந்து வந்தது. இது பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே நடமாடவே அஞ்சினர். இந்நிலையில் அங்கு தனிப்பிரிவு காவலராக மாரியப்பன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் அங்கு வந்தவுடன் சட்ட விரோதமான போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட நபர்களை கண்காணித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வைத்தார். கடத்தல் நடவடிக்கைகளையும் வழக்குப்பதிவு செய்ய வைத்து ஒடுக்கினார். 

இதனால் அங்கு குற்ற செயல்களில் ஈடுபடுவோர், ரவுடிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தாளமுத்துநகர் காவல்நிலையத்திலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தங்கள் பகுதியில் நடந்த குற்ற செயல்களை ஒடுக்கிய காவலர் பணிமாற்றம் செய்ததற்கு அந்த பகுதி பொதுமக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ஆனால் அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அங்கு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோர் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள பார் உரிமையாளர்கள் சிலர் இவரது பணிமாற்றத்தினை முன்னிட்டு விருந்து வைத்து கொண்டாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory