» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்
சனி 18, ஜூலை 2026 10:42:22 AM (IST)

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத 82 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல், வருமானம், இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சேவைகளை வழங்குவதற்காகச் சில வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது. இதில் 35 தாலுகா அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் கண்டறியப்பட்டது. சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூ.13 லட்சமும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.68 லட்சமும் என மொத்தம் ரூ.82 லட்சம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவில் கரூர் தாலுகா அலுவலகத்தில் அதிகபட்சமாக ரொக்கம் ரூ.1,18,130 மற்றும் கூகுள்பே வழியாக ரூ.16,33,654 கண்டறியப்பட்டுள்ளது. தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.22,970 கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை சரகத்திற்குட்பட்ட திசையன்விளையில் ரூ.32,200, தென்காசியில் ரூ.15,000, கூகுள்பே ரூ.1,68,200 மற்றும் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் ரூ.1,50,000 மற்றும் சென்னை எழும்பூர், சோழிங்கநல்லூர், மாம்பலம், பெரம்பூர் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் முறைகேட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இப்பணத்துடன் முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனை தொடர்பான பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:44:45 AM (IST)

நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:37:00 AM (IST)

சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ரூ.3.54 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:19:23 AM (IST)

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நிதியமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:24:32 PM (IST)








