» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 166 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.பூங்கோதை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பத்மபிரியா, ரோஷன்பேகம் (தேர்தல்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் மேஜர்.வி.எஸ்.ஜெயகுமார், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் காதலைக் கைவிட மறுத்த அக்கா சரமாரி வெட்டிக்கொலை: தம்பி வெறிச்செயல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:02:04 PM (IST)

த.வெ.க. அரசு சிறப்பாகவே உள்ளது, மின்வெட்டுப் பிரச்சினைக்கு திமுகவே காரணம்: அன்புமணி பேட்டி
செவ்வாய் 9, ஜூன் 2026 3:48:27 PM (IST)

மத்திய அரசு தமிழகத்திற்கான ரூ.1,000 கோடி நிதி விடுவித்துள்ளது: செங்கோட்டையன்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:34:14 PM (IST)

தமிழகத்தில் மின்வெட்டை ஏற்படுத்தச் சிலர் சதி செய்கின்றனர்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:52:39 PM (IST)

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)

இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டி : மு.க.ஸ்டாலினிடம் நாளை அறிக்கை அளிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:22:30 AM (IST)









