» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்!
திங்கள் 11, மே 2026 3:32:24 PM (IST)

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச. ஜோசப் விஜய், இன்று மரியாதை நிமித்தமாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் கைகுலுக்கி, கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். தேர்தல் களத்தில் நிலவிய கடுமையான விமர்சனங்களைத் தாண்டி, இந்தச் சந்திப்பில் வெளிப்பட்ட இணக்கமான சூழல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பூங்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பதிலுக்கு மு.க. ஸ்டாலினும் விஜய்க்குப் பொன்னாடை போர்த்தித் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இருவரும் சில நிமிடங்கள் அமர்ந்து சுமுகமாகப் பேசினர். மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பு மிக எளிமையாகவும், அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகவும் அமைந்தது.
இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகளான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சேகர்பாபு, அன்பில் மகேஸ், எழிலன் நாகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தேர்தல் பிரசாரத்தின் போது மு.க. ஸ்டாலின் அவர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த விஜய், தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் காட்டியுள்ள இந்த முதிர்ச்சியான அணுகுமுறை தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் காதலைக் கைவிட மறுத்த அக்கா சரமாரி வெட்டிக்கொலை: தம்பி வெறிச்செயல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:02:04 PM (IST)

த.வெ.க. அரசு சிறப்பாகவே உள்ளது, மின்வெட்டுப் பிரச்சினைக்கு திமுகவே காரணம்: அன்புமணி பேட்டி
செவ்வாய் 9, ஜூன் 2026 3:48:27 PM (IST)

மத்திய அரசு தமிழகத்திற்கான ரூ.1,000 கோடி நிதி விடுவித்துள்ளது: செங்கோட்டையன்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:34:14 PM (IST)

தமிழகத்தில் மின்வெட்டை ஏற்படுத்தச் சிலர் சதி செய்கின்றனர்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:52:39 PM (IST)

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)

இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டி : மு.க.ஸ்டாலினிடம் நாளை அறிக்கை அளிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:22:30 AM (IST)










தொண்டன்மே 12, 2026 - 11:33:54 AM | Posted IP 162.1*****