» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூத்தன்குழியில் நவ.21ல் கடலம்மா மாநாடு : சீமான் அறிவிப்பு

வியாழன் 13, நவம்பர் 2025 4:29:46 PM (IST)

நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வருகிற  21-ம்தேதி 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு நடத்தியுள்ள நிலையில், தற்போது கடல் மாநாடு நடத்த உள்ளார். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

"நெல்லை மாவட்டம் கூத்தன்குழி முதன்மை சாலையில் வரும் 21-ம்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும். ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும். இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory