» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ் புதல்வன் திட்டத்தில் ஆண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000? - தமிழக அரசு விளக்கம்

வியாழன் 13, நவம்பர் 2025 10:27:53 AM (IST)

தமிழ் புதல்வன் திட்டத்தில் ஆண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 நிதி வழங்கப்படும் என்பது தவறான தகவல் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

ஆணாக இருந்தால் மட்டும் போதும். தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசு வழங்குகிறது என்று குறிப்பிட்டு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: இது திரிக்கப்பட்ட தகவல். தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6 முதல் பிளஸ்-2 வரை படித்திருக்கவேண்டும்.

அந்த மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகளை தடையின்றி முடிக்கும் வரை மட்டும் தமிழ்நாடு அரசு ரூ.1,000 நிதியை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும். ஆணாக பிறந்த அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என்பது தவறான தகவல். வதந்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory