» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆசிரியைகளிடம் 160 பவுன், ரூ.31½ லட்சம் நூதன மோசடி: பெண்கள் உள்பட 4 பேர் கைது

ஞாயிறு 9, நவம்பர் 2025 9:13:59 AM (IST)

இரிடியத்தில் முதலீடு செய்வதாக கூறி 2 ஆசிரியைகளிடம் 160 பவுன், ரூ.31½ லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜாத்தி (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரிடம் கடந்த ஆண்டு 4 பேர் கும்பல், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் உதவிக்காக கேட்டு சுமார் ரூ.1½ லட்சம் மற்றும் 160 பவுன் நகைகளை வாங்கினர். பின்னர் அந்த நகைகளை திருப்பி கொடுக்காமல் இரிடியத்தில் முதலீடு செய்ததாக கூறி அதற்கான போலி ரசீதுகளை கொடுத்து அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிந்து, ராதாபுரத்தைச் சேர்ந்த பவுலின் ராணி என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதேபோல் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை லட்சுமி என்பவரிடம் கடந்த 2023 முதல் 2025 வரை 7 பேர் கொண்ட கும்பல் இரிடியம் வாங்கி வெளிநாட்டில் விற்பனை செய்தால் பல கோடி லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறினர்.

இதனை நம்பிய அவர் சுமார் ரூ.30 லட்சம் வரை அவர்களுக்கு கொடுத்து ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து அவர் கடந்த மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீசார், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவராமன், ராணி ஆகியோரை கடந்த மாதம் கோவையில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜெயகுரு என்ற பெண்ணையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை, வலைவீசி தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory