» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)
கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? என்று பாஜக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் கள்ளச் சாராயத்தால் பலியிடப்பட்ட உயிர்கள்: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் - 22, கள்ளக்குறிச்சி - 65. இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறது திமுக அரசு?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் காய்ச்சியதாக கோவிந்தராஜ் (எ) கண்ணு குட்டி, கைது செய்யப்பட்டபோது, அவன் திமுக நிர்வாகியே இல்லை என்று கதை கட்டியது திமுக. இன்றோ திமுக கவுன்சிலரும் இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ் குமார் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததற்காகக் கைதாகியுள்ளார். இதற்கு என்ன கதை கூறப் போகிறார்கள்?
கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? இது போன்ற செயல்களில் ஈடுபட தான் திமுக கவுன்சிலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:47:40 PM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலில் சுவாமி மாலையைத் தன் கழுத்தில் அணிந்த பூசாரி சஸ்பெண்ட்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:15:13 PM (IST)

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:57:15 AM (IST)

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படிப் பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல்குமார் பேச்சை நீக்கிய சபாநாயகர்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:27:51 AM (IST)

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் மீது 6 பிரிவுகளில் வழக்கு : காவல்துறை விளக்கம்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 10:33:26 AM (IST)

கூடங்குளம் அணு உலையில் வடிகால் அமைப்பிற்குள் நுழைந்த ஜெல்லி மீன்கள்: மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:33:58 AM (IST)









