» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (05.05.2025) நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 335 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு நாற்காலிகள் வழங்கினார்கள்.
நடைபெற்ற கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சேக்அப்துல் காதர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், துணை இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் மேஜர் ஜெயகுமார், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 9:26:14 PM (IST)

போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சனி 14, ஜூன் 2025 8:27:24 PM (IST)

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக அரசு இடையூறு : நயினார் நாகேந்திரன்
சனி 14, ஜூன் 2025 5:35:54 PM (IST)

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு அண்ணாமலை வாழ்த்து!
சனி 14, ஜூன் 2025 5:05:14 PM (IST)

மாப்பிள்ளை அவர்தான், சட்டை என்னுடையது: மத்திய அரசை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்!
சனி 14, ஜூன் 2025 4:54:52 PM (IST)
