» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு

சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)



காலநிலை மாற்றத்திற்கு ஒவ்வொருவரும் எவ்வாறு காரணமாகின்றோம் என்பதை பொதுமக்கள், பணியாளர்கள் அனைவரும் உணர்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருநெல்வேலி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக "நிலையான வாழ்விடம்" (Sustainable Habitat) என்ற தலைப்பிலான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, இ.வ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று (22.03.2025) தொடங்கி வைத்து, நெகிழிக்கு பதிலாக மீண்டும் மஞ்சப்பையினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

இப்பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்ததாவது: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை குறைத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. Sustainable Habitation என்ற தலைப்பில் இன்று நடத்தப்படுகின்ற இப்பயிற்சி வகுப்பில் நீடித்த நிலைத்த வாழ்க்கைக்கு ஒவ்வொருவரும் செய்திட வேண்டிய கடமைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இப்பயிற்சி வகுப்பில் தெரிவிக்கபடவுள்ளது. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில் தேவையற்ற குப்பைகள் சேர்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உற்பத்தியாகும் கழிவுப் பொருட்களில் மக்கக்கூடியவை மக்காதவை என தரம்பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். கழிவுகளை சாலையோரங்களில் போடுவதை தவிர்த்திட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்திடவும், கழிவுப்பொருட்கள் மற்றும் குப்பைகளை முறையாக கையாள வேண்டும். மக்கும் குப்பைகளை உரமாக்க வேண்டும். மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்த முன்வர வேண்டும். முறையாக கையாளப்படாத குப்பைகளால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காலநிலை மாற்றத்திற்கு ஒவ்வொருவரும் எவ்வாறு காரணமாகின்றோம் என்பதை பொதுமக்கள், பணியாளர்கள் அனைவரும் உணர்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும். நமது மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, காலநிலை மாற்ற இயக்கம் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. சுய நிலைத்தன்மை மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பாரம்பரிய அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர் எம். ராஜேஷ் கண்ணன் இந்த அமர்வை வழிநடத்தினார். வாழ்விடம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ATREE, மணிமுத்தாறு அமைப்பின் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எம். மதிவாணன் உரையாற்றினார்.

கிராமங்களில் சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் இராதாபுரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார் மற்றும் நாங்குநேரி வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். குழு விவாதங்கள் மற்றும் கருத்துப் பகிர்வு நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தா.அனிதா , வட்டாட்சியர் செல்வன் , துறைசார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory