» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை : தினகரன் குற்றச்சாட்டு
செவ்வாய் 18, மார்ச் 2025 4:37:47 PM (IST)
முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு- ஏழை, எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் அறிவித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவசரகதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதயதெய்வம் அம்மாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து அதனையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.
எனவே, இனியும் அவசரகதியிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திட்டங்களை தொடங்குவதை நிறுத்திவிட்டு அம்மா மருந்தகங்கள் போன்ற மக்களின் மகத்தான ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:10:06 PM (IST)

சென்னை - சாய் நகர் சீரடி வாராந்திர ரயிலை குமரி வரை நீட்டிக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 3:26:54 PM (IST)

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர்!
வியாழன் 11, டிசம்பர் 2025 11:55:29 AM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)










