» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
குமரி மாவட்டம், புதுக்கடை அருகே இணையம் புத்தன் துறை பகுதியை சேர்ந்தவர் சுதன் (32), மீனவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இணையம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவரை பெங்களூருக்கு அழைத்து சென்று லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் சுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுதனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரையா இன்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து சுதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். சுதனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபாரதம் விதித்து தீர்ப்பு கூறினார். ரூ.6 ஆயிரத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சுதனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறைக்கு அழைத்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - தமிழக வெற்றிக்கழகம் விளக்கம்
புதன் 19, மார்ச் 2025 10:29:04 AM (IST)

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலி: நெல்லையில் பரிதாபம்
புதன் 19, மார்ச் 2025 8:35:58 AM (IST)

நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அதிகாரி பதவி ஏற்பு: அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து
புதன் 19, மார்ச் 2025 8:33:23 AM (IST)

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு: அரசு டாக்டர் சிறையில் அடைப்பு
புதன் 19, மார்ச் 2025 8:05:32 AM (IST)

காவல் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 18, மார்ச் 2025 5:21:35 PM (IST)

முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை : தினகரன் குற்றச்சாட்டு
செவ்வாய் 18, மார்ச் 2025 4:37:47 PM (IST)
