» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் கூட்டணி: தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:40:24 AM (IST)
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று தமிழக வெற்றிக்கழகம் அறிவித்து உள்ளது.

இதற்கு அவ்வப்போது விஜய் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வோம் என்று விஜய்யே ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‘2026-ம் ஆண்டு ஒரு முக்கிய கட்சியுடன் கூட்டணி அமையலாம். ஆனால் கூட்டணி தொடர்பான முடிவு, அந்த நேரத்தில்தான் எடுக்கப்படும்’ என்று கூறி இருந்தார்.
அவர் குறிப்பிட்டது தமிழக வெற்றிக்கழகத்தை தான் என்றும், அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி அமைக்க இருக்கிறார்? என்றும் சமூக வலைத்தளங்களில் யூகங்கள் பற்ற வைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகள் கூறியதாவது: ‘எங்கள் நிலைப்பாட்டை பல முறை கூறி விட்டோம். 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். தற்போது வரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
எங்கள் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நிர்வாகிகளையும் அறிவித்து வருகிறோம். எங்கள் தலைவர் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. மற்றபடி, கூட்டணி தொடர்பாக வலைத்தளங்களில் வரும் விஷயங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
சந்திரன்Feb 10, 2025 - 10:29:58 AM | Posted IP 162.1*****
போடா தெலுங்கு கோமாளி
ஆனந்த்Feb 10, 2025 - 10:28:44 AM | Posted IP 172.7*****
ஒருவனும் கூட்டு சேர வர மாட்டான் ஒரு அம்மாஞ்சியை முதல்வராக்கவா செலவு செய்து கத்திக் கொண்டு இருக்கிறான்
மேலும் தொடரும் செய்திகள்

தொகுதி மறுவரையறையை தென் மாநிலங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: ரேவந்த் ரெட்டி
சனி 22, மார்ச் 2025 5:26:56 PM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
சனி 22, மார்ச் 2025 4:33:45 PM (IST)

எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - டி.கே.சிவகுமார் திட்டவட்டம்!
சனி 22, மார்ச் 2025 11:56:37 AM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)

பேச்சுவார்த்தைFeb 10, 2025 - 12:20:07 PM | Posted IP 172.7*****