» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் காதல் திருமணம் செய்த 2 நாளில் தம்பதி தற்கொலை: போலீசார் விசாரணை

திங்கள் 10, பிப்ரவரி 2025 8:38:30 AM (IST)

நெல்லையில், காதல் திருமணம் செய்த 2 நாளில் புதுமணத் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பார்வதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 7-ந் தேதி புதுமண தம்பதியர் வாடகைக்கு குடியேறினர். அவர்கள் வீட்டின் உரிமையாளரிடம், ‘‘நாங்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த வீடு நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று மதியம் வரையிலும் பூட்டியே கிடந்தது. வீட்டின் வெளிப்புறம் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், அந்த வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் 2 பேரும் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டு உரிமையாளர் இதுபற்றி பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர்கள் சென்னை ராயபுரம் துரை தெருவைச் சேர்ந்த முத்து மகன் விஜயன் (26), சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்த காந்தி மகள் பவித்ரா (24) என்பது தெரிய வந்தது. ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறி 2 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு நெல்லையில் குடியேறியதும், பின்னர் அவர்கள் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக புதுமண தம்பதியரின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்களின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் காதல் திருமணம் செய்த 2 நாளில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory