» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடங்குளம் அருகே பைக் மீது கார் மோதி விபத்து: கணவன்-மனைவி பரிதாப சாவு!
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 10:51:17 AM (IST)
கூடங்குளம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அடுத்த பழவூர் அருகே உள்ள மாடன்பிள்ளைதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (55). கூலித்தொழிலாளியான இவரது மனைவி பாலிங்க புஷ்பம் (45). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்.
அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று 2 பேரும் ஊருக்கு கூடங்குளம் வழியாக திரும்பி வந்து கொண்டு இருந்தனர். கூடங்குளம் அருகே பஞ்சல் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார்-மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 2 பேரும் சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்து பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி செல்வன், பாலிங்கபுஷ்பம் ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குமரி மாவட்டம் குத்தளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (30) என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் காரில் உவரி கோவிலுக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடங்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரே காரணமா? தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
செவ்வாய் 8, ஜூலை 2025 4:46:14 PM (IST)

வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
செவ்வாய் 8, ஜூலை 2025 4:11:52 PM (IST)

போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்துக்கு நிபந்தனை ஜாமீன்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:50:54 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாது...?
செவ்வாய் 8, ஜூலை 2025 12:26:11 PM (IST)
