» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டெல்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை நம்பிக்கை

சனி 8, பிப்ரவரி 2025 5:04:29 PM (IST)



தலைநகரிலேயே தாமரை மலரும் போது தமிழகத்திலும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை இருக்கிறது  என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சென்னை கமலாலயத்தில் பாஜகவினர் மேள தாளங்கள் முழங்க ஆடிப் பாடி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பாஜக தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜக தலைநகரில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கும் டெல்லியைச் சார்ந்த தலைவர்களுக்கும் அகில பாரத தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் எங்கள் வாழ்த்துகளை சமர்ப்பிக்கிறோம்.

தலைநகரில் பாஜக தலை நிமிர்கிறது, ஆம் ஆத்மி தலை குனிகிறது. காங்கிரஸ் நிலை குலைகிறது. டெல்லி தேர்தலுக்காக தமிழகத்தில் இருந்து நிறைய தலைவர்கள் அங்கே சென்று பிரசாரம் செய்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றி. பாஜக வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்பதற்காக தலைநகரில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

தலைநகரிலேயே தாமரை மலரும் போது தமிழகத்திலும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தலைநகரில் தாமரை மலர்ந்ததை கொண்டாடுவதைப் போல 2026-ல், தமிழகத்திலும் தாமரை மலர்வதை கொண்டாடுவோம்.

ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கேஜரிவால் ஊழல் குற்றச்சாட்டால் சிறைக்கு சென்றார். டெல்லியில் எந்த இடத்திலும் கேஜரிவால் வளர்ச்சியை தரவில்லை. டெல்லி மக்கள் உறுதியான முடிவை தந்திருக்கிறார்கள். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி தேர்தலை முறையாக எதிர்கொள்ள முடியவில்லை.

இங்குள்ள வெற்றியை கூட கொண்டாட முடியாத சூழ்நிலையில் திமுக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் இடங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory