» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் 11ம் தேதி மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு

சனி 8, பிப்ரவரி 2025 4:22:00 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளினை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி மதுபானக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 11.02.2025 (செவ்வாய்க் கிழமை) வள்ளலார் நினைவு நாளினை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. 

எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 11.02.2025 (செவ்வாய்க்கிழமை) வள்ளலார் நினைவு நாளினை முன்னிட்டு மூடப்படும் என ஆட்சியர் இரா.சுகுமார், உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education




New Shape Tailors





Thoothukudi Business Directory