» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புவிசார் குறியீடு பொருட்களை விளம்பரப்படுத்த வேண்டும்: நாஞ்சில் திருவிழாவில் ஆட்சியர் பேச்சு
சனி 8, பிப்ரவரி 2025 3:40:44 PM (IST)

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை சுற்றுலாபயணிகள் அதிகம் வாங்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நபார்டு மற்றும் மதுரை வேளாண்மை தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் இணைந்து நடத்தும் நாஞ்சில் திருவிழா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (08.02.2025) துவக்கி வைத்து பேசுகையில்- நாஞ்சில் திருவிழாவில் கலந்து கொள்வது ஒரு புது அனுபவமாக உள்ளது. நபார்டு வங்கியின் பெரும் முயற்சியினால் நம் இந்தியாவில் உற்பத்தியாக கூடிய பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. நாஞ்சில் திருவிழா நிகழ்ச்சியின் ஒருபகுதியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் அமைந்துள்ள பூம்புகார் மையத்தில் 50 விற்பனை அரங்குகள் அமைத்து சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் வகையில் பணிகள் மேற்கொண்டுள்ள நபார்டு உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கன்னியாகுமரி என்பது சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய ஒரு இடமாகும் இங்கு நீங்கள் விற்பனை மையத்தை அமைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். கன்னியாகுமரிக்கு பொதுமக்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து ஆயிரம் சுற்றுலா பயணிகளும், விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நம்முடைய கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்கள். இந்த சுற்றுலாத்தளத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.
மேலும் பல்வேறு மாநிலத்தில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் நம்முடைய புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை வாங்கி செல்வார்கள். இதன் மூலம் நம்முடைய புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அறிமுகமாகும்.
குறிப்பாக மார்த்தாண்டம் தேன், கஸ்தூரி மஞ்சள், மிளகு, வாழைநார் கைவினைப் பொருட்கள், கடல் சிப்பிகளை வைத்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், கன்னியாகுமரி மட்டி வாழை, கன்னியாகுமரி கிராம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சுய உதவிக் குழுக்களின் மூலம் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள்.
சுய உதவி குழுக்களுக்கு அதிகமான கடன் கொடுக்கும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாகும். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை சுற்றுலாபயணிகள் அதிகம் வாங்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல தலைமை பொது மேலாளர் ஆனந்த், சுரேஷ் ராமலிங்கம் (நபார்டு), நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலப் பொது மேலாளர் திரும.சந்தானம், நாகர்கோவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மண்டல மேலாளர் வரப்பிரசாத், மதன கோபால், துறை அலுவலர்கள், சுயஉதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொகுதி மறுவரையறையை தென் மாநிலங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: ரேவந்த் ரெட்டி
சனி 22, மார்ச் 2025 5:26:56 PM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
சனி 22, மார்ச் 2025 4:33:45 PM (IST)

எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - டி.கே.சிவகுமார் திட்டவட்டம்!
சனி 22, மார்ச் 2025 11:56:37 AM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
