» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அருகே இரும்பு வியாபாரி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கைது

ஞாயிறு 19, ஜனவரி 2025 10:47:25 AM (IST)

நெல்லை அருகே இரும்பு வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே தேவர்குளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வடக்கு புளியம்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவருடைய மகன் சேதுபதி (27). இவர் கேரளாவில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளது. சேதுபதி தனது பெற்றோர், சகோதரருடன் கேரளாவில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி சேதுபதி குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் சேதுபதி வடக்கு புளியம்பட்டியில் இருந்து தெற்கு அச்சம்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை மர்மநபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதுபதி தனது மோட்டார் சைக்கிளில் வன்னிக்கோனேந்தல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றார். அப்போது அங்கிருந்த வன்னிகோனேந்தல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வெனிஸ்குமார் (25) என்பவர் சேதுபதியிடம், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பியவுடன் மற்ற வாகனங்களுக்கு வழிவிடுமாறு கூறினார். 

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இந்த முன்விரோதத்தில் வெனிஸ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து சேதுபதியை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது. இதையடுத்து வெனிஸ்குமார், அவருடைய நண்பர்களான பெருமாள் மகன் வினோத் (21) மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory