» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்

வெள்ளி 17, ஜனவரி 2025 12:55:21 PM (IST)

பொங்கல் தொகுப்புடன் ரூ.2ஆயிரம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்கவில்லை. இதுகுறித்து பொங்கலுக்கு முன்பே தகவல் வெளியானது. இதையடுத்து, பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த வக்கீல் ஏற்காடு மோகன்தாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வராததால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் பொங்கலுக்கு முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரிக்கை செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் வக்கீல் மோகன்தாஸ் முறையிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் மகிழ்ச்சி தான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. ரொக்கம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory