» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு உயிரிழப்பு : எஸ்பி, காவல்துறையினர் அஞ்சலி!

வெள்ளி 17, ஜனவரி 2025 10:52:05 AM (IST)

தென்காசி அருகே விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு எஸ்பி அரவிந்த் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

தென்காசி ஆபாத் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலி (40). கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய இவர் பின்னர் மாவட்ட போலீஸ் தனிப்படை பிரிவில் வேலை செய்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி இரவில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். 

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் செய்யது அலி பலத்த காயமடைந்தார். அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான தென்காசிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால், துணை கண்காணிப்பாளர்  தமிழ் இனியன் மற்றும் போலீசார், குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் அடக்க தலத்தில், போலீசார் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செய்யது அலி உடல் அடக்கம் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory