» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் மாட்டுப்பொங்கல் திருவிழா....!
வியாழன் 16, ஜனவரி 2025 4:13:09 PM (IST)

நாகர்கோவிலில், ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக, நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
அறக்கட்டளையின் நிறுவனர், ஷோபா தலைமையில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாடுகளுக்கு திலகமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், பாண்டிய சிலம்ப அகடமி, ஆசான் தங்கபாண்டியன் தலைமையில், கிராமிய மற்றும் சிலம்பக் கலைக்குழு, கிராமிய சிலம்பாட்டம், வீர விளையாட்டுக்கள், நடனங்கள் போன்ற வீர சாகச நிகழ்ச்சிகள் நடத்தினர். மறைந்து வரும் சிவகங்கை மருதுபாண்டி சகோதரர்களின், தமிழர் வீர விளையாட்டான, வளறி தற்காப்பு விளையாட்டும் நடைபெற்றன.
அதன் நினைவாக தமிழர்களின் தற்காப்பு வளறி ஆயுதத்தை, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் ஆர் காந்தி அவர்களுக்கும், தமிழ்நாடு நடசாரி சிலம்பாட்ட கழக தலைவர் ஜே. அர்னால்டு அரசு அவர்களுக்கும், பைரவி அறக்கட்டளை ஷோபா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஐயப்பா மகளீர் கல்லூரி பேராசிரியை மற்றும் மாணவிகள், முன்னாள் கால்நடைத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிர்வாகிகள், மேட்பர்வையாளர்கள், அட்வொகேட்ஸ் கீரெஷா பிரசாத், சஞ்சய், வடக்கன்குளம் கருணை இல்லம் நிர்வாகிகள், மரியாச்செல்வமணி, தாமஸ், மைக்கேல் ஜார்ஜ், கண்மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புற்றுநோய் தின கருத்தரங்கம்!!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:13:34 PM (IST)

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:32:09 AM (IST)

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச பெருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் ஜோதி தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:09:22 AM (IST)

திருநெல்வேலியில் 8வது பொருநை புத்தகத் திருவிழா நிறைவு: ஆட்சியர் பாராட்டு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:55:08 AM (IST)

தமிழர்களின் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:29:12 AM (IST)

நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:35:28 AM (IST)
