» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்: ஆட்சியர் கார்த்திகேயன் அனுப்பி வைத்தார்!

சனி 7, டிசம்பர் 2024 4:43:19 PM (IST)



பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.8.52 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், அனுப்பி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (07.12.2024) /பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், அனுப்பி வைத்தார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் வட மாவட்டங்களை புரட்டி எடுத்த பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 5 கிலோ அரசி, சீனி, நயம் துவரம் பருப்பு, ரவை ½ கிலோ, மல்லி பொ, மஞ்சல் பொடி, வத்தபொடி, சாம்பார் பொடி, சீரகம், கடுகு, டீ தூள், பிஸ்கட் பாக்கெட், போர்வை, சேலை, சாரம் என 1068 குடும்பங்களுக்கு ரூ.8.52 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், அனுப்பி வைத்தார்.

நிவாரணம் வழங்க முன்வரும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஆ.சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory