» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகம், இலங்கை கடற்கரை நோக்கி நகரும்!
வெள்ளி 6, டிசம்பர் 2024 3:57:17 PM (IST)
வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை அடையும் என்றும் 12-ம் தேதி வாக்கில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வியாழன் 13, நவம்பர் 2025 5:31:06 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

கூத்தன்குழியில் நவ.21ல் கடலம்மா மாநாடு : சீமான் அறிவிப்பு
வியாழன் 13, நவம்பர் 2025 4:29:46 PM (IST)

தமிழக உரிமையை காப்பதில் தி.மு.க. அரசு தோல்வி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
வியாழன் 13, நவம்பர் 2025 4:25:24 PM (IST)

மேகதாது அணை: திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் - எடப்பாடி பழனிசாமி
வியாழன் 13, நவம்பர் 2025 4:14:45 PM (IST)

ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவுடன் கூட்டணியா? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:07:39 PM (IST)








