» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு!
செவ்வாய் 12, நவம்பர் 2024 12:07:36 PM (IST)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று மதியம் வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்துள்ளது . வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
செவ்வாய் 8, ஜூலை 2025 4:11:52 PM (IST)

போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்துக்கு நிபந்தனை ஜாமீன்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:50:54 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாது...?
செவ்வாய் 8, ஜூலை 2025 12:26:11 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி: முதல்வர் இரங்கல் - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:47:13 AM (IST)
