» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளம்பெண்ணின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட இன்ஜினியர் கைது

ஞாயிறு 10, நவம்பர் 2024 9:24:53 AM (IST)

கடையநல்லூரில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வெளியிட்ட இன்ஜினியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைகுளம் சின்னத்தெருவை சேர்ந்தவர் முசாபுதீன் (29). இன்ஜியரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது சென்னையில் வசித்து வந்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த திருமணமான 30 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இவற்றை அந்த பெண்ணுக்கு தெரியாமல் முசாபுதீன் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். மேலும் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

கொரோனா காலகட்டங்களில் முசாபுதீன் சென்னையில் வேலை செய்வதை விட்டுவிட்டு கடையநல்லூருக்கு வந்து விட்டார். அதுபோல் அந்த பெண்ணும் காயல்பட்டினத்திற்கு வந்துவிட்டார். இருப்பினும் 2 பேரும் செல்போனில் பேசி நெல்லைக்கு வந்து தனிமையில் சந்தித்து பேசினார்கள்.

இந்த விஷயம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரியவந்தது. அவரை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் முசாபுதீனுடன் பேசுவதை அந்த பெண் நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முசாபுதீன், அந்த பெண்ணுடன் தனிமையில் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை வெளியிட முடிவு செய்தார். அதன்படி, அவற்றை அந்த பெண்ணின் அண்ணியின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இந்த சம்பவங்களை தொடர்ந்து கடையநல்லூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து, முசாபுதீனை அதிரடியாக ைகது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கடையநல்லூரில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வெளியிட்ட என்ஜினீயர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory