» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

ஞாயிறு 10, நவம்பர் 2024 9:18:56 AM (IST)



ராணுவ வீரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் விஜய் சந்தித்து உரையாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது வாக்காளர் திருத்த பட்டியலில் கவனத்துடன் பணியாற்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முழு நேர அரசியலுக்கு முன்பாக, தான் ஒப்புக்கொண்டுள்ள புதிய படத்தில் கடந்த சில நாட்களாக பங்கேற்று நடித்து வருகிறார். இந்த நிலையில், சென்னையில் ராணுவ வீரர்களை விஜய் திடீரென்று சந்தித்து உரையாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் நேற்று வைரல் ஆனது.

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு நடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் பங்கேற்க சென்ற விஜய்யை, ராணுவ வீரர்கள் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர்.

படப்பிடிப்பு இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் விஜய் வரமாட்டார் என்று அவர்கள் நினைத்திருந்த வேளையில் திடீரென்று விஜய் விழா நடந்த அரங்குக்குள் நுழைந்தார். இதை பார்த்த ராணுவ வீரர்கள் கைத்தட்டி விஜய்யை வரவேற்றனர். அப்போது மேளம், தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. வேகமாக வந்த விஜய் ராணுவ வீரர்களை கட்டிப்பிடித்து தன் அன்பை பரிமாறிக்கொண்டார். ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஓடி வந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.

அதன் பிறகு ராணுவ வீரர்களின் குடும்பத்தாருடன் விஜய் நீண்ட நேரம் உரையாடினார். ராணுவ வீரர்களை விஜய் சந்தித்த படங்களும், வீடியோவும் நேற்று வைரல் ஆகி, வெகு நேரம் டிரெண்டிங்கில் இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory