» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தூய்மை பணி: ஆட்சியர் துவக்கி வைத்தார்!

சனி 9, நவம்பர் 2024 4:34:30 PM (IST)



கன்னியாகுமரி கடலோரப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பேரூராட்சி துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து கன்னியாகுமரி கடலோரப்பகுதியில் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று துவக்கி வைத்து தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாகவும், பசுமை மாவட்டமாகவும், முழு தூய்மையான மாவட்டமாகவும் மாற்றிடும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்ப்பதோடு, அந்த குப்பைகளை அவரவர் வீடுகளிலேயே மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிந்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தரும் கன்னியாகுமரி கடலோரப்பகுதியினை தூய்மைப்படுத்தும் பணி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

கடல்களில் சேரும் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளன. இதனைக்கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் அழகிய கடற்கரை சூழலை பாதுகாப்பதில் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தூய்மைப்பணி தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் அனைத்து பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் தாங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்திட முன்வர வேண்டும். நமது மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றும் முயற்சியில் உங்களுடைய குடும்பத்தாரையும், நண்பர்களையும், சுற்றத்தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதை இத்தருணத்தில் கேட்டுக்கொள்வதோடு, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை நமது மாவட்டத்தை முழு தூய்மையான மாவட்டமாக மாற்றிட வேண்டும் என தெரிவித்தார். 

தூய்மைப்பணியில் நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம் மற்றும் ரோகிணி பொறியியல் கல்லூரி கிரீன் கிளப் மாணவர்கள் 120 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை வன பாதுகாவலர் பிரதாப், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பாரதி, துணை இயக்குநர் மீன்வளத்துறை சின்னகுப்பன், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, கன்னியாகுமரி வனச்சரக அலுவலர் ராஜேந்திரன், கன்னியாகுமரி மாவட்ட பசுமை தோழர் நினா ஜோசப், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் ஜோ பிரகாஷ், ஷோபா, ரோட்டரி எலைட் சிவதாணு பிள்ளை, கடலோர பேரிடர் மேலாண்மை குழு சுரேஷ், மாவட்ட கிரீன் பெல்லோ நினா தேசிய பசுமை படை பொறுப்பாளர்கள், தன்னார்வலர் அமைப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory