» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜனவரியில் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு?

சனி 9, நவம்பர் 2024 3:52:29 PM (IST)



கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலத்தை வரும் 2025 ஜனவரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளது. கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை,133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நடைபெறுகிறது. 

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பாலத்தை திறந்துவைத்து, திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டு விழாவிலும் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory