» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடனை கேட்டு நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல்: மேடைப்பாடகர் விஷம் குடித்து தற்கொலை
சனி 9, நவம்பர் 2024 8:56:56 AM (IST)
பாவூர்சத்திரத்தில் கடனை கேட்டு நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் உறவினருக்கு வீடியோ அனுப்பி விட்டு மேடைப்பாடகர் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார்.
ெதன்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் (53). மேடைப்பாடகரான இவர் விழாக்கள், கலைநிகழ்ச்சிகளில் குழுவினரோடு சென்று பாடுவது வழக்கம். இவருக்கு ஜெயாமேரி (47) என்ற மனைவியும், பைசன் (25) என்ற மகனும் உள்ளனர். ஜெயாமேரி அழகுக்கலை நிபுணராக உள்ளார். பைசன், பாலிடெக்னிக் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் மேற்படிப்பு பயின்று வருகிறார்.
கடந்த 2010-ம் ஆண்டு சகாயராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்கினார். பின்னர் அவர் தவணைத்தொகையை சரிவர செலுத்தவில்லை என்று கூறி, அவரது காரை தனியார் நிதி நிறுவனத்தினர் கடந்த 2012-ம் ஆண்டு எடுத்து சென்று ஏலம் விட்டனர்.
மேலும் சகாயராஜிடம் கார் கடனுக்கான மீதி தொகை ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக கேட்டு வந்தனர். மேலும் அவரது வீட்டுக்கும் நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி சென்று கடன் நிலுவைத்தொகையை செலுத்துமாறு மிரட்டியதால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
நேற்று முன்தினம் ஜெயாமேரி வெளியூரில் மணப்பெண்ணுக்கு திருமண அலங்காரம் செய்வதற்காக சென்று விட்டார். நேற்று காலையில் வீட்டில் தனியாக இருந்த சகாயராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர், தற்கொைல செய்து கொள்வதற்கு முன்பாக தனது சாவுக்கு தனியார் நிதி நிறுவன மேலாளரும், ஊழியருமே காரணம் என்று உருக்கமான வீடியோ பதிவு செய்து உறவினருக்கு அனுப்பினார்.
மேலும் இதுதொடர்பாக வீட்டில் உருக்கமான கடிதமும் எழுதி வைத்து விட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே சகாயராஜை நீண்டநேரமாக குடும்பத்தினர், உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் எடுத்து பேசாததால், அருகில் உள்ள கடைக்காரர் சென்று பார்த்தார். அப்போது சகாயராஜ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும், பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சகாயராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கு முன்பாக சகாயராஜ் எழுதியிருந்த உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாவூர்சத்திரத்தில் கடனை கேட்டு நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் மேடைப்பாடகர் உறவினருக்கு வீடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.