» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் ஒரே பதிவு எண்ணில் 3 அரசு பஸ்கள் இயக்கம்? தமிழக அரசு விளக்கம்
வெள்ளி 18, அக்டோபர் 2024 8:01:50 PM (IST)

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு தோற்றத்தில் ஒரே பதிவு எண்ணில் 3 தோற்றத்தில் அரசு பஸ் இயக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழக அரசு சார்பில் ‘த.நா. 74 என் 1813' என்ற ஒரே பதிவு எண்ணில் 3 தோற்றத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்ட அந்த 3 பஸ்களின் படங்களும் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாக பரவியது. இது ‘வாட்ஸ் அப்' உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் விவாத பொருளாக உருவெடுத்தது.
பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் தங்களது கமெண்டில் தமிழக அரசை வசை பாடி வருகிறார்கள். ஒரே பதிவு எண்ணில் 3 பஸ்கள் ஓடுவது சாத்தியமா? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், இது திரிக்கப்பட்ட தகவல் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
‘த.நா. 74 என் 1813' என்ற இந்த பஸ் 8-2-2017 அன்று புதிய பஸ்சாக கூண்டு கட்டி 9-3-2017 முதல் புறநகர் பஸ்சாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் தடத்தில் இயக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து இந்த பஸ்சுக்கு பதில் புதிய பஸ் இயக்கப்பட்டதால், 4-1-2020 முதல் இது நகர பஸ்சாக (இருக்கை மாற்றம்) செய்யப்பட்டு இயக்கப்பட்டது.
இந்த பஸ்சின் வயது 6-ஐ கடந்த நிலையில் அரசாணைப்படி கடந்த 7-10-2023 அன்று இதன் கூண்டு புதுப்பிக்கப்பட்டு நகர பஸ்சாக நாகர்கோவில்-மேல் மிடாலம் தடத்தில் (தடம் எண்: 9ஏ) இயக்கப்பட்டு வருகிறது என்று கன்னியாகுமரி போக்குவரத்து வணிக மேலாளர் தெரிவித்துள்ளார் என்று மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கொடுத்துள்ள விளக்கத்தின் மூலம் ஒரே பதிவு எண் கொண்ட இந்த ஒரே பஸ், மூன்று கட்டங்களில், மூன்று தோற்றத்தில், மூன்று வழித்தடத்தில் ஓடியது தெரியவந்துள்ளது. ஒரே பதிவு எண்ணில், வெவ்வேறு தோற்றத்தில் தனது மூன்று முகத்தை காட்டி சமூக வலைத்தளங்களில் றெக்கை கட்டி பறந்த புதிருக்கு விடையை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 9:26:14 PM (IST)

போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சனி 14, ஜூன் 2025 8:27:24 PM (IST)

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக அரசு இடையூறு : நயினார் நாகேந்திரன்
சனி 14, ஜூன் 2025 5:35:54 PM (IST)

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு அண்ணாமலை வாழ்த்து!
சனி 14, ஜூன் 2025 5:05:14 PM (IST)

மாப்பிள்ளை அவர்தான், சட்டை என்னுடையது: மத்திய அரசை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்!
சனி 14, ஜூன் 2025 4:54:52 PM (IST)
