» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வெள்ளி 18, அக்டோபர் 2024 5:05:41 PM (IST)
தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற "இந்தி" தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.என். ரவி பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான். இந்தி திணிக்கப்படவில்லை. தமிழக மக்களிடையே, இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன். இந்தி மொழியை மக்கள் கற்கின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதம் நீக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:29:20 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச.20ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:07:19 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: டிச.23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:00:22 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூல்: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:46:25 PM (IST)

2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும்: விஜய் பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:49:39 PM (IST)

பாதாள சாக்கடை திட்டப்பணியால் சாலை சேதம் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:39:20 PM (IST)










