» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தெப்பக்குளத்தில் மூழ்கிய மாணவரை காப்பாற்ற முயன்ற சக மாணவர் பலி
வியாழன் 17, அக்டோபர் 2024 4:23:32 PM (IST)
பழவூர் அருகே தெப்பக்குளத்தில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் தத்தளித்த மாணவரை காப்பாற்றுவதற்காக குதித்த சக மாணவர் உயிரிழந்தார்.
நாகர்கோவில் அருகே தனியார் பொறியில் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 6பேர் பழவூர் அருகே உள்ள தெற்குகன்னங்குளம் தெப்பகுளத்தில் குளிப்பதற்காக நேற்று சென்றனர். அதில் குளித்தபோது, ஒரு மாணவர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தாராம்.
அவரை காப்பாற்றுவதற்காக கரையில் நின்றிருந்த நாகர்கோவில் வேதாநகைரைச் சேர்ந்த மிக்கேல் மகன் ஆன்றனி ஜெபின்(19) தெப்பக்குளத்தில் குதித்தாராம். அப்போது, அதிலுள்ள படிகட்டில் தலை அடிபட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் தெரியாமல் மூச்சு திணறிய மாணவர் காப்பாற்றப்பட்டார். இதுதொடர்பாக பழவூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.