» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெரியாரை தாண்டி அரசியல் செய்ய முடியாது : விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
புதன் 18, செப்டம்பர் 2024 5:18:15 PM (IST)
"தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் பெரியாரை தாண்டி, அரசியல் செய்ய முடியாது" என்று நடிகர் விஜய் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். எளிய முறையில் மலர் மாலையை தானே எடுத்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி, பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்தார் .