» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 18, செப்டம்பர் 2024 4:58:05 PM (IST)
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. ஆனால் சமவெளிப் பகுதிகளில் தொடர்ந்து வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்கள் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது செப்., 23 வரை நீடிக்கும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பால் வெப்பத் தாக்கம் கடுமையாக இருக்கும். வெளியில் செல்வோருக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில் பகல் நேரத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்துக்கு நிபந்தனை ஜாமீன்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:50:54 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாது...?
செவ்வாய் 8, ஜூலை 2025 12:26:11 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி: முதல்வர் இரங்கல் - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:47:13 AM (IST)

ரயில் விபத்தில் 2 மாணவர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
செவ்வாய் 8, ஜூலை 2025 10:40:28 AM (IST)
