» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை
புதன் 18, செப்டம்பர் 2024 10:03:58 AM (IST)
சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியான காக்க தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வியாசர்பாடி அருகே தனிப்படை போலீசார் இவரை பிடிக்க முயன்ற போது அவர் போலீசாரை தாக்கியதால் போலீசார் அவரை என்கவுண்டரில் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநக போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டபின் நடைபெறும் 2வது என்கவுண்ட்டர் இதுவாகும். இதற்குமுன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:29:20 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச.20ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:07:19 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: டிச.23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:00:22 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூல்: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:46:25 PM (IST)

2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும்: விஜய் பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:49:39 PM (IST)

பாதாள சாக்கடை திட்டப்பணியால் சாலை சேதம் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:39:20 PM (IST)










