» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏசி அறையில் உட்கார்ந்து கணக்கு போடும் மத்திய நிதியமைச்சர்: கே.பி.முனுசாமி தாக்கு

வெள்ளி 13, செப்டம்பர் 2024 5:12:12 PM (IST)

ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு போடுவது மட்டுமே  மத்திய  நிதியமைச்சரின் வேலையாக உள்ளது என்று அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இன்று அவர் அளித்த பேட்டியில் "மத்திய அரசின் கொள்கைகளை ஏற்காவிட்டால் மாநிலங்களுக்கு நிதி தரமாட்டேன் என்று கூறுவது அபத்தமானது. மத்திய நிதியமைச்சரை பொறுத்தவரை பிற மாநிலங்கள் எப்படி கஷ்டப்பட்டு அவர்களுக்கு நிதி கொடுக்கிறார்கள் என உணருவது இல்லை. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு போடுவது மட்டுமே அவர்களது வேலையாக உள்ளது. மாநிலத்தில் இருந்து கோடிக்கணக்கான நிதியை ஈட்டி தருகிறார்கள்.

உதாரணமாக கிருஷ்ணகிரி டோல்கேட்டில் தினமும் ₹1 கோடி வருவாய் என்றளவில் வருடத்திற்கு ₹365 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. இது மத்திய அரசுக்கு தான் செல்கிறது. இந்த தொகைக்கான ஜிஎஸ்டியை கூட செலுத்தாமல் அவர்கள் எடுத்து கொள்கிறார்கள். இந்த நேரத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை வேறு உயர்த்தி இருக்கிறார்கள். இதுபோல பல வழிகளில் மத்திய அரசு மாநில அரசிடம் இருந்து நிதியை பெற்றுக்கொண்டு இங்குள்ள திட்டங்களுக்கான நிதியை ஒதுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

கந்தசாமிSep 14, 2024 - 01:11:17 PM | Posted IP 162.1*****

நீயே ஒரு டுபாக்கூர் நீ அடுத்தவரை குறை சொல்லுகிறாயா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory