» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் நாளை 72 மையங்களில் குரூப் 2 தேர்வு: ஆட்சியர் அழகுமீனா தகவல்!

வெள்ளி 13, செப்டம்பர் 2024 4:19:30 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப் 2 தேர்வினை 72 மையங்களில் 20335 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்த பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி - II (தொகுதி 2 மற்றும் 2A) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 14.09.2024 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. மேற்படி தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட 45 தேர்வு மையங்களிலும், விளவங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட 27 தேர்வு மையங்களிலும் 20335 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். 

இத்தேர்வு தொடர்பாக 2 கண்காணிப்பு அலுவலர்களும், 7 பறக்கும் படை அலுவலர்களும், 19 Mobile Unit-களும், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் தலா ஒருவர் வீதம் 72 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் காலை 08.30 மணி முதல் 09.00 மணிக்குள் இருக்க வேண்டும். காலை 09.00 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

தேர்வர்கள் தவறாமல் தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள தொகுதி II தேர்விற்கான நுழைவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் தேர்வர்கள் கைப்பேசி, மின்னணு கடிகாரம், கால்குலேட்டர் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் கருப்புநிற பந்து மை பேனா மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors







CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory