» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலை விபத்தில் உதவினால் ரூ.10ஆயிரம் பரிசுத் தொகை : ஆட்சியர் தகவல்!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 5:10:04 PM (IST)
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு ரூ.10ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ரூ.5ஆயிரம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசர கால உதவியினை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பது ஆகும். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர். அனைத்து விபத்துகளும் மாவட்ட ஆட்சியரது தலைமையில் கீழ் இயங்கும் மாவட்ட அளவிலான மதிப்பீடு குழு ஆய்வு செய்யும். இதில் தேர்வு செய்யப்படும் நற்பண்பாளர்களுக்கு ரூ.10ஆயிரம் பரிசுத்தொகை வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:47:55 AM (IST)

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது: நோயால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
சனி 15, பிப்ரவரி 2025 5:13:17 PM (IST)

மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 3:56:20 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)
