» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் நவீன கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை முகாம்!

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 4:20:19 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆக.22ஆம் தேதி தொடங்கி பல்வேறு பகுதிகளில் நவீன கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. 

கண்புரை நோயாளருக்கான சிகிச்சை முறைகள் மிக  வேகமாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது.  முந்தைய காலங்களில் கையாண்ட கண்புரை அறுவை சிகிச்சை முறைகள் தற்போது செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக அதிநவீன முறையிலான மற்றும் பழைய முறையை விட மிகவும் மேம்படுத்தப்பட்ட "கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சையே கண்புரை நோயாளர்களுக்கு தற்பொது செய்யப்பட்டு வருகிறது.

இம்முறையில் கண்புரை நோயாளரின் கண்களில் உள்ள பழுதுபட்ட லென்ஸ்களுக்கு பதிலாக புதிதான வேறொரு லென்ஸ் மிகவும் எளிதான முறையில் பொருத்தப்படுவதால் கண்புரை நோயாளர்களுக்கு கீழ்கண்ட பயன்கள் ஏற்படுகிறது.

1 பார்வையானது மிக தெளிவாகவும் மிக நேர்த்தியாகவும் கிடைக்கிறது.

2 புதிய லென்ஸ் பொருத்தப்படுவதால் மிக நீண்ட நாட்கள் பார்வை தெளிவாக இருக்கிறது.

3 மிக கனமான கண்ணாடி அணிய தேவையில்லை.

4 மிக குறுகிய காலத்திலேயே (ஒரு வாரத்தில்) நமது இயல்பான பணிகளை செய்ய முடியும்.

மேலும் "கண் லென்ஸ்” பொருத்தும் கிசி;ச்சையின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முழு பயனையும் கண்புரை நோயாளர்கள் பெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும்  கீழ்கண்ட தேதிகளில் "கண் லென்ஸ் பொருத்தும் முகாம்”  மூலம்  நமது மாவட்டத்தில் உள்ள  அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில்  நடைபெற உள்ளது.

• அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் 22.08.2024 அன்று சத்துணவு மையம் பிச்சை குடியிருப்பு மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி  பொத்தையழயஜலும் நடைபெற உள்ளது.

• தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் 21.08.2024 அன்று அரசு மருத்துவமனை பூதபாண்டி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி தெரிசனம்கோப்பிலும்   நடைபெற உள்ளது

• இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 28.08.2024 அன்று அரசு துணை சுகாதார நிலையம் பறக்கை மற்றும் படிப்பகம் மேலசங்கரன்குழியிலும்  நடைபெற உள்ளது.

• குருந்தன்கோடு  ஊராட்சி ஒன்றியத்தில் 12.08.2024 அன்று அரசு துணை சுகாதார நிலையம் மாங்குழி மற்றும் அரசு துணை சுகாதார நிலையம் வாணியகுடியிலும் வைத்து  நடைபெற உள்ளது.

• தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் 08.08.2024 அன்று அரசு துணை சுகாதார நிலையம் கோழிபோர்விளை  மற்றும்  23.08.2024 அன்று மூலச்சல்  அரசு துணை  சுகாதார நிலையத்திலும் நடைபெற உள்ளது

• திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் 23.08.2024 அன்று   அரசு மருத்துவமனை குலசேகரத்தில்  நடைபெற உள்ளது

• கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 08.08.2024 அன்று ஆலஞ்சி  அரசு துணை சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது

• மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் 19.08.2024 அன்று தேவிக்கோடு அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் கருமானூர் அரசு துணை சுகாதார நிலையத்திலும் வைத்து   நடைபெற உள்ளது

• முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் 16.08.2024  அன்று பைங்குளம்  அரசு துணை சுகாதார நிலையத்திலும்   அரசகுளம் அரசு துணை சுகாதார நிலையத்திலும்    நடைபெற உள்ளது

இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் அனைத்து கண்புரை நோயாளர்களையும் அரசு வாகனத்தில் அழைத்து வந்து இலவசமாக கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

எனவே கண்புரை நோயாளர்கள் இவ்வறிய வாய்ப்பினை பயன்படுத்தி இந்த நவீன கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டு நமது கன்னயாகுமரி மாவட்டத்தில் கண்புரை நோயுற்றோர் அனைவரும் பார்வை அடைந்துள்ளனர் என்ற நிலையை ஏற்படுத்துமாறு குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory