» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 3:57:23 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (05.08.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மனுக்களை பதிவு செய்வதற்கு கோரிக்கையின் தன்மைக்கேற்ப 8 தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தது.
முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. மேலும் வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்கு அருகில் அமைந்துள்ள வாழ்வாதார வழிகாட்டி மையத்திற்கு அனுப்பி தீர்வு காணப்பட்டது.
மேலும், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துறை ரீதியாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2 இலட்சம் வீதம் விபத்து நிவாரணம் மற்றும் இயற்கை மரணம் நிவாரணத்தொகையினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், வழங்கினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.16 இலட்சம் மதிப்பிலான செயற்கை உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயா மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசின் 10 லட்சம் கோடி கடன் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 10, மே 2026 11:28:51 AM (IST)

ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் விஜய் முதல் கையொப்பம்!
ஞாயிறு 10, மே 2026 11:22:04 AM (IST)

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார் விஜய்: நேரு உள்விளையாட்டரங்கில் கோலாகலம்!
ஞாயிறு 10, மே 2026 11:15:05 AM (IST)

திமுகவின் மக்கள் நலத் திட்டங்களைப் புதிய அரசு தொடர வேண்டும்: மு.க. ஸ்டாலின் விருப்பம்!
ஞாயிறு 10, மே 2026 11:13:16 AM (IST)

நாளை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய்: 9 அமைச்சர்களும் பதவியேற்பு!
சனி 9, மே 2026 7:56:19 PM (IST)

தமிழகத்தின் புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து; ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதி!
சனி 9, மே 2026 5:40:29 PM (IST)










