» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆவினில் பனைப்பொருட்களை சேர்க்க உரிய நடவடிக்கை: அமைச்சர் த.மனோ தங்கராஜ்!

வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 3:41:43 PM (IST)



ஆவினில் பனைப்பொருட்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டதிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று (02.08.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிதிட்டப் பணிகள் சென்றடைய வேண்டுமென்ற ஒரே நோக்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

குறிப்பாக சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், விரிவான சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள உருவாக்கி மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 

அதன்ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவான சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி மதிப்பில் நாகர்கோவில் - துவரங்காடு சாலையில் 60.00 மீட்டர் நீளம், 2.50 மீட்டர் உயரத்தில் சிறுபாலம் கட்டி 1/2 கி.மீ தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு, இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2.60 கோடி மதிப்பில் பாலமோர் 3.60 கி.மீட்டர் அளவு சாலை மேம்பாடு செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட பன்னியோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடமும், ரூ.9.90 இலட்சம் மதிப்பில் சுருளகோடு ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் புதிய அங்கான்வாடி கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருளான ஆவின் பால் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்குமாறு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. சுங்க கட்டணம் விலக்கு அளிக்காத காரணத்தால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகை அனைத்தும் ஏழை விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம். பாலில் இருந்து எடுக்கும் வெண்ணைக்கு கூட ஜி.எஸ்.டி வரி போடுகிறார்கள் இது பல வழிகளில் பொது மக்களை பாதிக்கும். எனவே மத்திய அரசு மக்கள் விரோத ஏழைகள் விரோத அரசு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த ஆண்டு புதிதாக தேவைப்படும் பால் பொருட்களை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசின் சில அமைப்புகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதன்படி ஆவினில் பனைப் பொருட்களையும் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே பால் கொள்முதல் விலை ஆறு ரூபாய் உயர்த்தி விட்டோம் ஆகையால் தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லை. விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய பல திட்டங்களை செயல்படுத்தி விட்டோம் ஆனால் ஒன்றிய அரசு பல்வேறு சலுகைகளை நிறுத்தி உள்ளது. விவசாயிகளின் பிரச்சனையை ஏற்க மத்திய அரசும் முன் வர வேண்டும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எதுவுமே வழங்கவில்லை இது கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட் ஏற்கனவே மாட்டு தீவனங்களுக்கு விவசாயிகளுக்கு மானியம் வேண்டுமென கேட்டனர் இதனை வழங்கவில்லை. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

அதனைத்தொர்ந்து சுருளகோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நலவாழ்வு மையத்தில் தாய்சேய் நல பெட்டகத்தினை பாலூட்டும் தாய்மார்களுக்கு அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைதுறை உதவி செயற்பொறியாளர் பொறி.வென்ஸ், பொறி.ஜோஸ் ஆன்டனி சிரில் (தோவாளை), குமரி மாவட்ட இந்துசமய அறங்காவலர் குழு தலைவர் (சுசீந்திரம்) பிரபா இராமகிருஷ்ணன், ரெமோன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் சரவணன், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கபிள்ளை, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிராங்லின் (தடிக்காரன்கோணம்), விமலா சுரேஷ் (சுருளகோடு), ஐ.கேட்சன், சுரேஷ், ஏ.வி.ராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory