» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயல் தலைவராக வக்கீல் காமராஜ் நியமனம்

செவ்வாய் 25, ஜூன் 2024 4:36:00 PM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  ஓபிசி அணி மாநில செயல் தலைவராக வக்கீல் காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு துணை தலைவராக நெல்லை மாவட்டம் பரப்பாடியை சோ்ந்த வக்கீல் டி. காமராஜ் செயல்பட்டு வந்தார். இவர் சிறுவயதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் மீதும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மிகப்பெரிய பற்றும் மரியாதையும் கொண்டவர். 

கல்லூரி பருவத்தில் மாணவர் காங்கிரஸ் தலைவராகவும், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.தற்போது இவருக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான மாநில செயல் தலைவர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாணிக்கம் தாகூர் பிற்படுத்தப்பட்டோர் துறை மாநில தலைவர் நவீன் ஆகியோர் ஒப்புதலின்பேரில், தமிழகத்தில் புதிதாக 6 மாநில செயல் தலைவர்களை அகில இந்திய தலைவர் அஜய்சிங் யாதவ் நியமித்து உள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory