» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளசாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை : ஆளுநரை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்!

செவ்வாய் 25, ஜூன் 2024 4:32:58 PM (IST)



கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர்.

கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.பேரவைத் தலைவர் அப்பாவுவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை நடவடிக்கையில் அதிமுகவினர் பங்கேற்க ஒரு நாள் தடை விதித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.பேரவையில் இருந்து புறப்பட்டு அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.

இந்த சந்திப்பின்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

ஆளுங்கட்சி ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை

ஆளுங்கட்சி ஆதரவுடன் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவுவின் உத்தரவின் பேரில் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். பேரவையில் இருந்து புறப்பட்டு அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: ஆளுங்கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்திருக்க முடியாது. ஒரு நபர் ஆணையம் அமைத்தாலும், அதன்மீது மக்கள் மத்தியில் பெரிதாக நம்பகத்தன்மை ஏற்படவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலகங்களுக்கு அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின் கள்ளச்சாராயம் தொடர்பாக இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory